தம்பள: மாடுகளுடன் வீதிக்கிறங்கி விவசாயிகள் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 December 2020

தம்பள: மாடுகளுடன் வீதிக்கிறங்கி விவசாயிகள் போராட்டம்

  பொலன்நறுவ தம்பள பகுதியில் ஆயிரக்கணக்கான மாடுகளுடன் வீதிக்கிறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


வன இலாகா அதிகாரிகளின் கெடுபிடிகளால் காணிகளை இழந்தும் வருவாயிழந்தும் உதவிகளின்றியும் தாம் தவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் பௌத்த துறவிகளினால் மாட்டுக் கொட்டகைகள் இடித்து நாசமாக்கப்பட்டதன் தொடர்ச்சியில் பல்வேறு இன்னல்களுக்கு அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்றமையும் குறித்த கிராமப்பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


- M. R

No comments:

Post a Comment