வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடு தளர்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 10 December 2020

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடு தளர்வு

 


வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் இலங்கையர், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின் தமது வீடுகளிலும் மேலதிகமாக 14 நாட்கள் தனிமைப்பட்டிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர்.


இந்நிலையில்,கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தின் இறுதியில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நெகடிவாக இருந்தால் அதன் பின் வீடுகளில் தனிமைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.


வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர் தனிமைப்படுத்தல் முகாம்களில் அல்லது தமது சொந்த செலவில் ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment