அலி சப்ரிதான் சர்ச்சைக்குக் காரணம்: விமல் - sonakar.com

Post Top Ad

Thursday, 12 November 2020

அலி சப்ரிதான் சர்ச்சைக்குக் காரணம்: விமல்

 


கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் உடலங்களை புதைப்பதா? எரிப்பதா? என்ற சர்ச்சை உருவாவதற்கு நீதியமைச்சர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட கருத்தே காரணம் என்கிறார் விமல் வீரவன்ச.


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை புதைக்க அனுமதிக்குமாறு அமைச்சரவையில் அலி சப்ரி வேண்டுகோளை முன்வைத்திருந்த நிலையில் அது பற்றிப் பேசப்பட்டதாகவும் ஆனாலும் இவ்விடயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை மேற்கொள்ளவில்லையென்பதால் சுகாதார - மருத்துவ அதிகாரிகளே முடிவெடுக்க வேண்டும் எனவும் அதனை தொடர்ச்சியாக வாதப் பொருளாக வைத்திருப்பது குறுகிய மனப்பான்மையை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


யாருடைய மதம் - இனம் பார்த்தும் கொரோனா தொற்றவில்லையெனவும் கத்தோலிக்கர்களோ, தமது உறவினர்களைப் புதைக்க விரும்பும் வேறு யாருமே இவ்வாறு அடம்பிடிக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், எந்த மதத்தவராயினும் அவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படியென்பதே பேசப்பட வேண்டும் எனவும் ஏலவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றை திரும்பத் திரும்ப பேசி பிளவுகளை உருவாக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment