ஜனாஸா எரிப்பு: சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Saturday, 7 November 2020

ஜனாஸா எரிப்பு: சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடல்

 கொரோனா பாதிப்பினால் மரணிப்போரின் உடலங்களை எரிப்பது மாத்திரமே தீர்வெனும் அரசின் நிலைப்பாடு பாரிய விசனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் பவித்ரா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக அறியமுடிகிறது.


அரசியல்வாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இக்கலந்துரையாடலில், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருவரும் வைரொலஜிஸ்ட் ஒருவரும் கலந்து கொண்டுள்ள அதேவேளை, முன்னர் கட்டாய எரிப்பை வலியுறுத்திய தரப்பையும் இணைத்துக் கொள்ள முயற்சி இடம்பெற்றுள்ளது.


கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் பெருமளவு இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்து வருகின்றமையும் அவற்றில் பல கொரோனா பாதிப்பினால் இறந்ததாகக் கூறப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில சந்தர்ப்பங்களில் உடலங்கள் எரிக்கப்பட்ட பின்னரே உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment