இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு ஏற்புடையதன்று என அறிக்கை வெளியிட்டுள்ளது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.
அண்மையில் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேரில் சென்று முறையிட்டிருந்ததுடன் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு.
அதில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதால் மக்களுக்கு எதுவித மேலதிக பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சமய உரிமைகள் மறுக்கப்படுவது அவசியமற்ற செயல் என சுகாதார அமைச்சுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் ஆசிய மனித உரிமைகளுக்கான அமைப்பு உட்பட பல்வேறு உலக நாடுகள் இலங்கை அரசுக்கு இதே விடயத்தை எத்தி வைத்துள்ள போதிலும் எவ்வித மாற்றமும் வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment