தற்கொலை செய்தவர் 'கொரோனா' தொற்றாளராவது குறித்து விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Monday, 2 November 2020

தற்கொலை செய்தவர் 'கொரோனா' தொற்றாளராவது குறித்து விளக்கம்!


 


தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவர் கொரோனா தொற்றாளராவது எப்படியென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளது சுகாதார அமைச்சு.


கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பவர்கள் போன்று இறந்த பின் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்படுவதனால் இரண்டாவது வகையினரும் கொரோனா பாதிப்பினால் மரணித்தவராக கருதப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இறப்பின் பின்னரான பரிசோதனையில் கொரோனா தொற்றிருந்தமை உறுதி செய்யப்படுமிடத்து அதுவும் கொரோனா மரணம் எனவே கருத்திக்கொள்ளப்படுவதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளமையும் 22வது மரணம் தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவரது எனும் நிலையில் இக்கேள்வியெழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment