கொரோனா இனவாதம்: 'நிபுணர்கள்' மீது அலி சப்ரி அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Sunday 29 November 2020

கொரோனா இனவாதம்: 'நிபுணர்கள்' மீது அலி சப்ரி அதிருப்தி

 


கொரோனா நிபுணர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசின் நிபுணர் குழு மீதான தன் அதிபிருத்தியை வெளியிட்டுள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.


நிபுணத்துவத்துக்குப் பதிலாக இனவாதத்தைத் தேர்ந்தெடுப்பதன் ஊடாக சில ஊடகங்களால் முன்னெடுக்கப்படும் பிரித்தாளும் வலைக்குள் அவர்கள் சிக்கியிருப்பதாகவும், அபாயகரமான வழியில் சமூக புகழ்ச்சியை குறித்த நபர்கள் நாடி வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, சிலரின் நடவடிக்கைகளுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிப்பதற்கே இவர்கள் முயல்வதாகவும் அலி சப்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

வரலாறுகள் எழுதப்படுகின்றன. அழிக்கப்படுவதில்லை. கோத்தாபயவின் ஆட்சி முறைமை நல்லதோ கெட்டதோ இன்னமும் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் வரக்கூடிய மாணவர சமூகம் அதனைக் கற்று மதிப்பீ{டு செய்வர். மக்களும் ஒவ்வொரு 60 - 70 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றனர்.

Post a Comment