தேரர்கள் தலையீடு: மாட்டுக் கொட்டகை உடைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 28 November 2020

தேரர்கள் தலையீடு: மாட்டுக் கொட்டகை உடைப்பு

 


மின்னேரிய  தேசிய பூங்காவுக்குட்பட்ட பகுதியில் சர்ச்சைக்குரிய விடயமாக உருவாகியுள்ள மாட்டுக் கொட்டகையை சிங்ஹலே அமைப்பின் தேரர்கள் உடைத்தெறிந்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.


குறித்த பகுதியில் வன அதிகாரிகள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் தலையீடு நாடப்பட்டிருந்த நிலையில் அங்கு அதிகாரிகளுடன் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்ததோடு அதிகாரிகள் பணிப் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், தேரர்கள் களமிறங்கி மாட்டுக் கொட்டகை உடைத்துள்ளமையம் அப்பகுதியில் பௌத்த புராதனப் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக விளக்கமளிக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment