கொழும்பில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 14 November 2020

கொழும்பில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

 


கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள போதிலும் கொழும்பில் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பின் முக்கிய இடங்களைத் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இதன் பின்னணியில், திங்கள் (16) அதிகாலை 5 மணி முதல் மருதானை, கொம்பனித்தெரு, கோட்டை, டேம் வீதி மற்றும் புறக்கோட்டைப் பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏலவே தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment