கடந்த ஏழு மாதங்களாக கொரோனா மரணங்கள் எரிக்கப்படும் போதெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமின் மனமும் வேதனைப் பட்டது. அதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்றே பிரார்த்தனையில் ஈடுபட்டது. எனினும், முடிவுகள் வர முன்னரே எமது சமூகம் தேவைக்கு அதிகமாக அவசரப்படுகிறது என விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனா அசாத் சாலி.
ஏப்ரல் மாதத்தில் உடலங்களை புதைக்க அனுமதிக்க மறுத்த போதிலும் ஆறு மாதங்களின் பின் பரிசீலிப்பதாக வாதக்களித்ததன் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு முன்பாகவே தீர்மானம் வந்து விட்டது. ஒரு கவரில் போட்டு அடக்க அனுமதித்து விட்டார்கள் என்று அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புகிறார்கள்.
ஒரு நல்ல முடிவு வர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். எனினும், சுகாதார அமைச்சர் கூறியது போன்று தேவையான குழு கூடி அதற்கான முடிவை அறிவிக்க முன்பதாக நாமே அவசரப்பட்டு காரியத்தை கெடுக்க வேண்டிய அவசியமில்லையெனவும் சமூக வலைத்தளங்களில் ஓடியோ , வீடியோ வெளியிட்டு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளை நிறுத்துவது சமூகத்துக்கு நல்லதெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment