உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
கொரோனா இல்லாத எத்தனை முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று நாடாளுமன்றில் தனதுரையின் போது சஜித் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், இஸ்லாமிய சமூகத்தின் சமய உரிமைகளை மதித்து, முடிவெடுக்க வேண்டும் எனவும் கடந்த தடவை நிபுணத்துவ குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் இது வரை நடந்ததென்ன எனவும் சஜித் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில், 'சரியான' தீர்வொன்றை எடுக்க வேண்டும் எனவும் அரசியலுக்கு அப்பால் விஞ்ஞானம் இருந்தால் அதனை முழுமையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment