ரிசாத் பதியுதீன் பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Wednesday 25 November 2020

ரிசாத் பதியுதீன் பிணையில் விடுதலை

 


2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இ.போ.ச பேருந்துகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதி செய்து கொடுத்ததன் ஊடாக அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


கோட்டை நீதிமன்றில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.


ஒரு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாவுக்கான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன் 500 மில்லியன் ரூபா செலவில் கல்லாறில் மரக் கன்றுகளை நட வேண்டும் என்றும் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment