கொல்லுபிட்டி பகுதியிலிருந்து நேற்று 55 பேர்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 November 2020

கொல்லுபிட்டி பகுதியிலிருந்து நேற்று 55 பேர்!

 


நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 251 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் 55 பேர் கொழும்பு - 3, கொல்லுபிட்டி பகுதியிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கம்பஹாவிலிலிருந்து 18 பேரும், களுத்துறையிலிருந்து 16 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 430 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அறியப்படுகின்ற போதிலும் சமூக மட்டத்திலான பரவல் இன்னும் இல்லையெனவே தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment