வா'சேனை: 26 நாட்களுக்குப் பின் ஊரடங்கு தளர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 20 November 2020

வா'சேனை: 26 நாட்களுக்குப் பின் ஊரடங்கு தளர்வு

  


கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளும் கடந்த மாதம் 25 ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர்.பரிசோதனைகளின் முடிவின் பிரகாரம் தொற்றாளர்கள் அதிகரித்தமையால் குறித்த பொலிஸ் பிரிவில் 26 நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


அதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனைகளின் போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணமாக இன்று (20) குறித்த பொலிஸ் பிரிவில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.


இன்றையதினம் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் கடைப்பிடித்து முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.


குறித்த பகுதியில் மக்களின் நடவடிக்கைகளை அவதானிக்க பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சுகாதாரப் பிரிவினரும் சுற்றுவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


- எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment