20ம் திருத்தச் சட்டத்தில், குறிப்பாக இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக நேற்று வரை தெரிவித்து வந்த வாசு - விமல் மற்றும் கம்மன்பில தரப்பு இன்று தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அவர் தமது வாதத்தை ஏற்றுக்கொண்ட அதேவேளை அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை மதித்துத் தாம் ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் மூவரும் தத்தமது கட்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 20 நிறைவேறினாலும் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு வரும் எனவும் அதில் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களுக்கான தடை வரும் எனவும் விளக்கமளித்துள்ளனர். 19ம் திருத்தச் சட்டத்தில் இருந்த தடையை நீக்கியே 20ம் திருத்தச் சட்டம் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment