20ம் திருத்தச் சட்டத்தில் உள்ள 'இரட்டைக் குடியுரிமை' விவகாரத்தினால் விமல் வீரவன்சவின் கட்சி குறித்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவளிக்கத் தயங்கி வரும் நிலையில் இன்று அவர் மீது நாடாளுமன்றில் வைத்து பெரமுன ஒருவர் தாக்குதல் முயற்சி செய்ததாக அவரது கட்சி தெரிவிக்கிறது.
தமது கட்சி உறுப்பினர்களை ஆதரவாக வாக்களிக்குமாறு பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட நிர்ப்பந்தித்தமை தொடர்பில் விமல் வீரவன்ச பிரதமரிடம் முறையிட்டதாகவும், அதனை அறிந்து கொண்ட பின்னரே இவ்வாறு தாக்க முயன்றதாகவும் விமல் தரப்பு தெரிவிக்கிறது.
இரட்டைக்குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராவதை விமலின் கட்சி எதிர்ப்பதாக தெரிவித்து வருகின்ற அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய சகா விமல் வீரவன்ச என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment