கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்து, கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவரின் தாயார் இங்கு பணி புரிந்து வரும் நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அங்கு நடாத்தப்பட்ட மேலதிக பரிசோதனைகளின் பின்னணியில் 12 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அறியப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment