ரிசாத் எங்கே? சட்டமா அதிபர் CIDயிடம் கேள்வி - sonakar.com

Post Top Ad

Thursday 15 October 2020

ரிசாத் எங்கே? சட்டமா அதிபர் CIDயிடம் கேள்வி



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய உத்தரவிட்டு 72 மணித்தியாலங்களாகியும் இன்னும் கைது செய்யாதது ஏன்? என குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் சட்டமா அதிபர்.


இதன் போது தாம் ஆறு விசேட குழுக்களை களமிறக்கித் தொடர்ந்தும் தேடி வருவதாகவும் தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதிலளித்துள்ளார் குற்றப்புலனாய்வுப் பிரிவின் டி.ஐ.ஜி.


ரிசாத் பதியுதீனின் மனைவியிடமும் இன்று விசாரணை நடாத்தப்பட்டுள்ள அதேவேளை தொடர்ந்தும் அவரைத் தேடி பொலிஸ் குழுக்கள் பல இடங்களுக்குச் சென்று வருவதாக விளக்கமளிக்கப்படுகின்றமையும் கடந்த காலங்களில் ஞானசார மற்றும் ரவி கருணாநாயக்க போன்றோரையும் இவ்வாறே 'தேடி'யிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment