சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கு முற்று முழுதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சோடிக்கப்பட்டது என அவர் சார்பாக நீதிமன்றில் வலுவான வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கட்டார் சரிட்டி என்ற உலகறிந்த தொண்டு நிறுவனத்திடமிருந்து ஹிஜாஸ் பணம் பெற்றதாகக் கூறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையில் இஸ்லாமிக் ரிலீப் பன்ட் எனும் நிறுவனத்துக்கே பணம் வந்ததாகக் கூறுகின்றனர். அத்துடன், கட்டார் சரிட்டியைப் பற்றி பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரிப்பதாக கூறி மேலும் காலத்தை வீணடிக்கின்றனர்.
அத்துடன், மிகவும் இரகசியமாக மத்ரசா குழந்தைகளிடம் பெறப்பட்டதாகக் கூறும் வாக்குமூலங்களை ஊடகங்களுக்கு வழங்கியதும் சி.ஐ.டியினரே, ஏனெனில் அதைத் தயாரித்தவர்களும் அவர்களே எனவும் வாதிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒக்டோபர் 28ம் திகதிக்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment