கொரோனா பாதுகாப்பு உடையுடன் இன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.
கைதின் போது முகக் கவசம் மாத்திரமே அணிந்திருந்த அவருக்கு 27ம் திகதி வரையிலுமே விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சிறைச்சாலை நியதிப்படி அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ள நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment