20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த சமகி ஜன பல வேகய கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கையெடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார் அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டாக வாக்களித்து அரசின் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றத் துணை போயிருந்த அதேவேளை, கட்சித் தலைவர்கள் மாத்திரம் ஆதரவளிப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இவர்களை கூட்டணியிலிருந்து இடை நிறுத்தியாக வேண்டும் என வலியுறுத்துகின்ற பின்னணியில் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment