கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேறி வருவதாகவும் அவரை நாளையே வீட்டுக்கு அனுப்பி அங்கு சிகிச்சையைத் தொடர அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கிறார் அவரது மருத்துவர்.
தொடர்ச்சியாக முகக்கவசத்தைப் புறக்கணித்து வந்த ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதியானதையடுத்து இரு தினங்களுக்கு முன் ட்ரம்ப் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
எனினும், தற்போது அவர் தேறி வருவதாக மருத்துவர் கூறியுள்ளமையும் அவரது ஆதரவாளர்கள் அவர் நலம் பெற வேண்டி பேரணிகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment