ஹக்கீம் சொல்லித்தான் வாக்களித்தோம்: ஹரீஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 October 2020

ஹக்கீம் சொல்லித்தான் வாக்களித்தோம்: ஹரீஸ்!

  


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரின் முழு அனுமதியுடனேயே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கிறார் எச்.எம்.எம். ஹரீஸ்.


தமது கட்சி உறுப்பினர்கள் தமக்கே தெரியாமல் வாக்களித்து விட்டதாக தெரிவித்து, விளக்கம் கோரியுள்ளதாக மு.கா தலைவர் தனது செயலாளர் ஊடாக நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கல்முனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதுமே சர்வாதிகார ஜனாதிபதியின் இருப்புக்கு ஆதரவான கொள்கை கொண்ட கட்சியெனும் அடிப்படையிலேயே தமது கட்சி அவ்வாறு முடிவெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, அமைச்சுப் பதவிகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தம்மில் யாரும் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் 'பணம்' பெறவில்லையென அவர் மறுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment