தான் பதவியேற்று ஒரு வருடம் நிறைவுறுவதற்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் நெருக்கடிகள் தோன்றியுள்ள நிலையில் தன்னை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்கள் தனக்குத் தந்த ஆணையின் படி புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது தனது கடமையெனவும் அதனை தனது ஆட்சியின் முதலாவது வருடத்துக்குள்ளேயே செய்து முடிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ம் திகதி கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment