கத்தோலிக்கர்களின் வேதனையில் கிறிஸ்தவர்கள் சந்தோசப்படுவதாகவும் எரான் போன்றவர்கள் கத்தோலிக்கர்களைத் தொடர்ந்து தாக்கிப் பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
இன்றைய நாடாளுமன்ற உரையின் போதே சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் எரானை நோக்கி இவ்வாறு தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலில் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கவலையற்றவர்களே எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் தொடர்ந்து கத்தோலிக்கர்களை தாக்கிப் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ரிசாத் பதியுதீனின் சகோதரனை விடுவித்தது தொடர்பில் கேள்வியெழுப்பும் தகுதி எரான் போன்றவர்களுக்கு இல்லையெனவும் எரான் போன்றவர்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவியவர்கள் எனவும் அளுத்கமகே மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மஹிந்தானந்த அநாவசியமான விடயங்களை பேசி பொய்க் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக எரான் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்ததார்.
இதேவேளை எரானும் கிறிஸ்தவர் என நிரோஷன் பெரேரா விளக்கமளித்த போதிலும் அவர் கிறிஸ்தவர் என்பதாலேயே கத்தோலிக்கர்களின் துன்பத்தில் சந்தோசப்படுவதாக மஹிந்தானந்த பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment