பொரல, லெஸ்லி ரணகல மாவத்தையில் குடியிருந்த மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த நபர்கள் அண்மையில் சென்று வந்ததாக நம்பப்படும் ஆறு வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.
மினுவங்கொடயில் முதலாவது தொற்றாளர் ஒக்டோபர் 3ம் திகதியே கண்டறியப்பட்ட போதிலும் செப்டம்பர் 10 அளவிலேயே அங்கு அறிகுறிகளுடன் பலர் இருந்திருப்பதாக தற்போது விளக்கமளிக்கப்படுகின்றமையும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அங்கிருந்து பணியாளர்கள் சென்று வந்துள்ளதுடன் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment