மன்னாரில் இரு இடங்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Sunday, 11 October 2020

மன்னாரில் இரு இடங்கள் தனிமைப்படுத்தல்

 


மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள் அடையாளங்காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


குறித்த பகுதிகளுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment