கொரோனா தொற்றாளர்கள் 'பயணித்த' ஆறு பேருந்துகள் - sonakar.com

Post Top Ad

Thursday, 15 October 2020

கொரோனா தொற்றாளர்கள் 'பயணித்த' ஆறு பேருந்துகள்

 


கொரோனா தொற்றாளர்கள் பயணித்ததாக ஆறு பேருந்துகள் அடையாளங் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


தொற்றுக்குள்ளான நபர்கள் குறித்த பேருந்துகளில் பயணித்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர், இனி வரும் நாட்களில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பாக உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, தேவையேற்படின் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பேருந்து நடாத்துனர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.


தினசரி 25,000க்கு அதிகமான பயணிகள் பேருந்து சேவைகளை அண்மைய நாட்களில் உபயோகப்படுத்தி வந்த போதிலும் தற்போது அது 5000 அளவுக்குக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


கொரோனா தொற்றாளர்கள் பயணித்ததாக அடையாளங்காணப்பட்டுள்ள பேருந்துகளின் விபரம்:


  • Colombo-Medagama (ND 4890)
  • Makumbura-Galle (MD 2350)
  • Kadawatha-Ambalangoda (MG 0549)
  • Colombo-Jaffna (ND 6503)
  • Elpitiya-Colombo (ND 9788)
  • Galle-Kadawatha (NF 7515)

No comments:

Post a Comment