ரிசாத் பதியுதீனுக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Monday, 19 October 2020

ரிசாத் பதியுதீனுக்கு விளக்கமறியல்!

 


தலைமறைவாக இருந்த நிலையில் இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மக்களை வாக்களிப்பதற்காக அழைத்துச் செல்ல, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளை உபயோகித்ததன் ஊடாக அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எனினும், அதனை ரிசாத் தரப்பு மறுப்பதோடு கட்டணம் அரசாங்கத்தினாலேயே செலுத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிசாத் தலைமறைவாக இருக்க உதவியதன் பின்னணியில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment