பிரான்ஸ், ஜேர்மனியையடுத்து இரண்டாவது தேசிய லொக்டவுனுக்கு இங்கிலாந்து தயாராகி வருகிறது.
தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் பண்டிகைக்காலத்துக்கு முன்பாக கட்டுப்பாடுகள் ஊடாக தொற்றினைத் தடுக்கும் முகமாக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் ஒரு மாத காலம் அத்தியாவசிய பொருட்கள் - சேவைகள் வழங்காத அனைத்து வர்த்தகங்களையும் ஒரு மாத காலத்துக்கு மூடி வைக்க உத்தரவிடப்படவுள்ள அதேவேளை பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment