கொரோனா: வாழைச்சேனை துறைமுகத்துக்கு பூட்டு - sonakar.com

Post Top Ad

Saturday, 24 October 2020

கொரோனா: வாழைச்சேனை துறைமுகத்துக்கு பூட்டு

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட பதினொரு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று (24)  வாழைச்சேனை துறைமுகம் பூட்டப்பட்டுள்ளது என்று துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பலர் பேலியகொடை பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அவர்களின் பதினொரு பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதனைக் கவனத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரும் வரைக்கும் துறைமுகத்தை மூடி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


- எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment