முச்சக்கர வண்டியில் தங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொற்றாளர்! - sonakar.com

Post Top Ad

Friday, 30 October 2020

முச்சக்கர வண்டியில் தங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொற்றாளர்!

 


கொரோனா தொற்றுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாத நிலையில், கிரிபட்டிய பகுதியில் தொற்றாளர் ஒருவர் வீட்டுக்கு வெளியே முச்சக்கர வண்டியில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.


பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் பின்னணியில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல யாரும் வராத நிலையில் வீட்டின் வெளியில் தமது முச்சக்கர வண்டியில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்சமயம் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment