20ஐ நிறைவேற்ற அபிப்பிராய வாக்கெடுப்பு அவசியம்: நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 October 2020

20ஐ நிறைவேற்ற அபிப்பிராய வாக்கெடுப்பு அவசியம்: நீதிமன்றம்அரசாங்கம் முன் வைத்துள்ள உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தினை மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


அரசின் உத்தேச திருத்தச் சட்டத்தினை எதிர்த்து 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை பரிசீலித்த நீதிமன்றம், தமது தீர்ப்பினை கடந்த 10ம் திகதி சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.


இந்நிலையில், சபாநாயகர் அதனை இன்று சபையில் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில் உத்தேச திருத்தச் சட்டத்தின் 3, 5, 14 மற்றும் 22ம் சரத்துகள் அபிப்பிராய வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட முடியாதவையென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அரசாங்கம் மேலதிக 'திருத்தங்களை' மேற்கொள்ள நேற்றைய தினம் அறிவிப்பை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment