20ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் 19ம் திருத்தச் சட்டத்துக்கு தேவையான 'நல்ல' மாற்றங்களை அரசு முன் வைத்தால் அதனை ஆதரிக்கத் தயார் என தெரிவிக்கிறது சமகி ஜன பல வேகய.
தற்போது அரசு முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டம் சர்வாதிகாரத்தை நிறுவி மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதாகவுள்ளதனால் அதனை சமகி ஜன பல வேகய ஆதரிக்காது எனவும், 19ம் திருத்தச் சட்டத்துக்கு அவசியப்படும் ஆரோக்கியமான திருத்தங்களைக் கலந்துரையாடி அதனை ஆதரிக்கத் தயார் எனவும் சமகி ஜன பல வேகய சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டத்துக்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரி 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment