இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 17வது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலயைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 24ம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்சமயம் இரண்டாவது சுற்று கொரோனா தொற்று நிலவி வருவதுடன் 4354 பேர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment