17 புதிய இடங்களுக்கு ஊரடங்கு: இ.தளபதி விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 October 2020

17 புதிய இடங்களுக்கு ஊரடங்கு: இ.தளபதி விளக்கம்!

 


திவுலபிட்டிய, மினுவங்கொட பிரதேசங்களைத் தவிர்த்து மேலும் பல இடங்களுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான இடங்களுக்கு இவ்வாறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணம், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளுக்கு வர சந்தேக நபர்கள் மறுத்து வருவதே என விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.


திவுலபிட்டிய பெண்ணோடு பணி புரிந்த பெரும்பாலானவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு 800க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், மேலும் பலர் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல மறுத்து வருவதுடன் சிகிச்சை பெறவும் மறுப்பதனால் இவ்வாறு காலவரையறையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஜா-எல, கந்தான, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்தவெல, மீரிகம, நிட்டம்புவ, தொம்பே, பூகொட, வெயங்கொட. வெலிவேரிய, பல்லேவெல உட்பட்ட பிரதேசங்களுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment