மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா பரவல் வேகமாக இடம்பெற்றுள்ளமை புலனாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்த திவுலபிட்டிய பெண்ணொருவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், ஒக்டோபர் 3ம் திகதி பின்னிரவே அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகளின் பின்னணியில் தற்சமயம் வரை 832 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment