அபிப்பிராய வாக்கெடுப்புக்கு அரசு தயார்: நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 September 2020

அபிப்பிராய வாக்கெடுப்புக்கு அரசு தயார்: நீதியமைச்சர்

 


20ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மக்கள் முன் வைத்து அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என பெரும்பாலான மனுதாரர்கள் கோரியுள்ளனர்.


இந்நிலையில், நீதிமன்றம் அதற்குச் சாதகமாக தீர்ப்பளித்தால் அபிப்பிராய வாக்கெடுப்பை நடாத்தவும் அரசு தயார் என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


உத்தேச 20ம் திருத்தச் சட்டத்துக்கு திருத்தங்களைக் கொண்டு வரப் போவதாக அரசு தெரிவிக்கின்ற அதேவேளை 39 மனுதாரர்கள் குறித்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment