தோற்றாலும் இலகுவில் விட்டுச் செல்ல மாட்டேன்: ட்ரம்ப் அடம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 September 2020

தோற்றாலும் இலகுவில் விட்டுச் செல்ல மாட்டேன்: ட்ரம்ப் அடம்!எதிர்வரும் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தான் தோல்வியுற்றால் இலகுவில் விட்டுச் செல்லப் போவதில்லையென தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.


தபால் மூல வாக்களிப்பில் தமக்கு தொடர்ந்து சந்தேகமிருப்பதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், எளிதில் விட்டுச் செல்லப் போவதில்லையெனவும் நீதிமன்ற தலையீடு இருக்கும் எனவும் இப்போதே தெரிவித்துள்ளதையடுத்து பல மட்டங்களிலிருந்தும் ட்ரம்பின் கூற்றுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ட்ரம்ப் சார்பு குடியரசுக் கட்சியின் தலைவர், யார் வென்றாலும் ஜனவரி 20 அமைதியான முறையில் அதிகாரம் கை மாறும் என உறுதியளித்துள்ளார். ஆயினும், ட்ரம்பின் செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் அமைந்து வருவதாக எதிர்ப்பு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment