ஈழப் போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கான அனுமதி உட்பட்ட விடயங்களை முன் வைத்து அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன் வைத்த நிலையியல் கட்டளையை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் நிராகரித்தன் பின்னணயில் சபையில் சூடான வாதப் பரிமாறல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவகாரம் நீதிமன்றில் வழக்காடப்படுவதாக சபாநாயகர் தெரிவிக்க, அது ஏலவே முடிந்த வழக்கு என கஜேந்திரகுமார் தனது தரப்பு பதிலை வழங்கியதுடன் தமக்குப் பதில் தர முன்பதாகவே நாடாளுமன்ற செயலாளர் இவ்விடயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் சுட்டிக்காட்டி ஆவேசப்பட்டிருந்தார்.
லக்ஷ்மன் கிரியல்லவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஆதரவாகப் பேசிய போதிலும் சபாநாயகர் தனது முடிவை மாற்றக் கூடாது என ஆளுந்தரப்பினர் சர்ச்சைக் கருத்துக்களை முன் வைக்க, அதற்கு எதிர்க்கட்சிகள் பதிலுரைத்ததன் பின்னணியில் சற்று நேரம் சூடான வாதங்கள் பரிமாறப்பட்டிருந்ததுடன் சபாநாயகர் சபையைத் தவறாக வழி நடாத்துவதாக பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment