ஆணைக்குழுக்கள் இருந்துதான் என்ன செய்தன? அலிசப்ரி கேள்வி! - sonakar.com

Post Top Ad

Monday, 7 September 2020

ஆணைக்குழுக்கள் இருந்துதான் என்ன செய்தன? அலிசப்ரி கேள்வி!

கடந்த ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் இருந்து தான் என்ன செய்தன? என கேள்வியெழுப்பியுள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.


90க்கும் மேற்பட்ட அறிக்கை கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்க முடியாது போனது. அதற்குப் பொறுப்புச் சாட்டப்படும் பொலிஸ் மா அதிபரை பதவி விலக்கக் கூட முடியாத சூழ்நிலை, பல ஆணைக்குழுக்கள் விசாரணை நடாத்தியே காலங்கடத்தினவே தவிர எதுவும் உருப்படியாக நடக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அரசின் 20ம் திருத்தச் சட்டம் ஊடாக மீண்டும் ஜனாதிபதியிடமே முழுமையான அதிகாரத்தைக் குவிப்பதற்கான திட்ட வரைபு முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment