மு.கா சார்பில் ஒன்றுக்கு இரண்டு வழக்குகள் - sonakar.com

Post Top Ad

Monday 28 September 2020

மு.கா சார்பில் ஒன்றுக்கு இரண்டு வழக்குகள்

 


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்த்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


முதலாவது மனு கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இரண்டாவது மனு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களினால் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.


இந்த இரண்டு மனுக்களுடன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். இம்மனுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்த்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment