மக்களின் உரிமை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: திஸ்ஸ - sonakar.com

Post Top Ad

Saturday, 19 September 2020

மக்களின் உரிமை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: திஸ்ஸமக்களின் அடிப்படைகள் உரிமைகள் பற்றி எவ்வித கவலையுமற்ற ஆட்சியாளர்கள் தம்மையும் தமது எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கே 20ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வர முயல்வதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய தேசியப்பட்டியல் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க.


அடிப்படையில் தமது கட்சி உத்தேச 20ம் திருத்தச் சட்ட வரைபை நிராகரித்துள்ளதாகவும் அதனை நாடாளுமன்றில் தோற்கடிப்பதற்கான முழு முயற்சியில் களமிறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, யார் தயாரிதது என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கே தெரியாமல் இருந்த குறித்த திருத்தச் சட்டத்தை மாற்றமின்றி நிறைவேற்றியாக வேண்டும் என ஜனாதிபதி கங்கணம் கட்டியுள்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment