20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏலவே 18 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் மனுத் தாக்கல் செய்யப்போவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம்.
அரசின் 20ம் திருத்தச் சட்டம், முழுமையான சர்வாதிகாரத்துக்கு அங்கீகாரம் வழங்குவதுடன் அடிப்படை உரிமைகளை நசுக்குவதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சமகி ஜன பல வேகய உட்பட சிவில் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
இப்பின்னணியில் தற்போது தமது கட்சியும் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ஹக்கீம் தெரிவிக்கின்றமையும் ஜனாஸா எரிப்பு விவகாரத்திலும் எம்.ஏ சுமந்திரன் இலவசமாக ஆஜராகப் போவதாக அறிவித்த பின்னர் முஸ்லிம் காங்கிரசும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தமையும் அந்த வழக்கு இது வரை பரிசீலனையைத் தாண்டாத நிலையில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment