திம்பிரியாதாவெலயில் புதிய பள்ளிவாயல் திறப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 18 September 2020

திம்பிரியாதாவெலயில் புதிய பள்ளிவாயல் திறப்புஹொரவ்பொத்தான, திம்பிரியாதாவெல கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் இன்று(18) ஜும்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது. 


அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் வேண்டுகோளுக்கமைய அல் ஹிமா சமூகம் சேவைகள் அமைப்பின் ஊடாக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் நூரானியா ஜும்ஆ பள்ளிவாசல் எனும் பெயரில் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


பள்ளி நிர்வாகம் சபையின் தலைவர் T.A சுபஹான் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதீதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்து கொண்டதோடு, விசேட அதிதிகளாக அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூருல்லாஹ், சமூக சேவையாளர் A.R.M தாறிக், முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது  ஆகியோர் கலந்துகொண்டனர்.


-முஹம்மட் ஹாசில்

1 comment:

Mohammad Akram said...

Allahu Akbar, Masha Allah...

Post a Comment