எல்லா உத்திகளை கையாண்டும் தோல்வி: ஹிஸ்புல்லாஹ் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 September 2020

எல்லா உத்திகளை கையாண்டும் தோல்வி: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்தெந்த உத்திகள் எல்லாம் கையாள முடியுமோ அந்தந்த உத்திகளை எல்லாம் கையாண்டோம் ஆனால் இறைவன் எங்களுக்கு தோல்விகளை தந்துள்ளான் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (04)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்ததும் பேசுகையில்,


நடந்து முடிந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று ஒரு கெபினட் அமைச்சராக வந்திருந்தால் என்ன மனநிலையில் நான் இருந்திருப்பேனோ  தோல்வியடைந்தும் நான் அதே மனநிலையில் தான் இருக்கின்றேன். எனது மனநிலையில் எந்த மாற்றமும் கிடையாது எனக்கு இரண்டும் ஒன்றுதான்.


என்னைப் பொறுத்தவரை நான் தோல்வியடையவில்லை இந்த சமூகம்தான் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியாகும்.


இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் ஒரு தொழிலாக கருதவில்லை என்னை சிலர் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிடச் சொல்வார்கள் அல்லது கிண்ணியாவுக்கு வாருங்கள் திருகோணமலையில் போட்டியிடுங்கள் என்றெல்லாம் எனக்கு பல ஆலோசனைகளை சொல்வார்கள் இது ஒரு எம்.பி.தொழில் தேவை என்றால்தான் நான் இதைச் செய்ய வேண்டும் எம்.பி.தொழில் எனக்கு அவசியம் கிடையாது. எம்.பி.வேலையை எடுக்க வேண்டும் என்ற தேவைப்பாடும் எனக்கு கிடையாது.


என்னுடைய மக்களுக்கு, என்னுடைய சமூகத்துக்கு என்னால் முடிந்ததை செய்வதற்கு இந்த பதவியை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்தலில் நான் போட்டியிட்டேன்.


என்னை தோக்கடித்த துரோகத்தனத்தை மூடி மறைப்பதற்காக எங்களுடைய துரோகிகள் பொய்யான கட்டுக் கதைகளை எல்லாம் உடனடியாக பரப்பினார்கள். இவர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை வென்றெடுப்பதற்காக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுத்துவிட்டார் என்றெல்லாம் கதைகளை பரப்பினார்கள்..


அவ்வாறு நாங்கள் யாரும் விட்டுக் கொடுக்கவும் முடியாது அப்படி விட்டுக் கொடுக்க இந்த நாட்டில் எந்த அதிகாரமும் கிடையாது சட்டமும் கிடையாது.


அந்த பல்கலைக்கழகத்தை இறைவனின் உதவியோடு அதை நாங்கள் மீட்டெடுப்போம் அதற்கான நடவடிக்கைகளை, பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.


எதிர்வரும் காலங்களில் நாங்கள் மிக நிதானமாக, கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதனை சிறந்த முறையில் கையாள வேண்டும்.


என்னுடைய எதிர்காலத்தில் என்னால் முடிந்தளவு என்னுடைய சமூகப் பணிகளை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் நான் ஒருபோதும் என்னுடைய சமூகப் பணயில் இருந்து ஓய்வெடுக்கப் போவதில்லை என்னுடைய இறுதி மூச்சு இருக்கின்ற வரைக்கும் உங்களுக்காக இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக என்னால் என்னென்ன சமூகப் பணிகளை செய்ய முடியுமோ அத்தனை பணிகளையும் செய்வேம் என்றார்.


-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment