மாகாண சபைகளைக் இல்லாதொழிக்கும் திட்டத்தை தான் எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் பெயரை மாற்றலாம் எனவும் தெரிவிக்கிறார் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க.
20ம் திருத்தச் சட்டம், மாகாண சபைகள் ஒழிப்பு மற்றும் சர்வாதிகார ஆட்சியென பெரமுன அரசின் நடவடிக்கைகள் பல விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சரான பிரசன்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் இருக்கும் மாகாண சபைகள் முறைமையில் மாற்றங்கள் அவசியப்படின் அவற்றைச் செய்ய வேண்டுமே தவிர மாகாண சபைகளை இல்லாதொழிக்கக் கூடாது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment