ரஷ்ய விமான சேவை பணியாளரான ரஷ்ய பிரஜையொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த மாத்தறை, பொல்ஹேனயில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விமான சேவைக் குழுவைச் சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவருக்கே கொரோனா தொற்றிருப்பது இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியைசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment