ஜப்பானிய கடன் உதவியுடன் கொழும்பு போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமாக கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டிருந்த லைட் ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொழும்பு முதல் மாலபே வரை சுமார் 1850 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு வந்ததுடன் சம்பிக்க ரணவக்க இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment