பால் மா இறக்குமதியை முழுமையாக நிறுத்த முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday, 27 September 2020

பால் மா இறக்குமதியை முழுமையாக நிறுத்த முஸ்தீபு

 இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பால் மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதனை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.


உள்நாட்டு பால் உற்பத்தி 35 வீதமே இருப்பதாக தெரிவிக்கின்ற அவர், அதனை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் பால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார்.


ஏலவே முன்னெடுக்கப்படட பசு மாடுகள் இறக்குமதி திட்டம் வெற்றியளிக்காத நிலையில் பாரிய இழப்புகளுக்கு முதலீட்டாளர்கள் முகங்கொடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment